பலரின் எழுதப்படாத பதிவு
பலரின் எழுதப்படாத பதிவு ...... தலைப்பினால். சற்றே குழம்பிப்போயிருப்பீர்கள் . இது கற்பனைக்கதையோ அல்லது புனைக்கதையோ அல்ல . எம்முள் பலபேரின் கதையாக இருக்கலாம் . இனி தொடங்கும் உங்கள் வாழ்கைக்கு வித்திட்டதாய் வரும் பதிவு . Parenthood , பெரிய பதவி , பொறுப்பு . எம்முள் சிலர் இதன் அர்த்தம் தெரியாமல் இருக்கின்றோம் . ஒரு குழந்தையை இவ் உலகிற்கு கொண்டு வரும் இயற்கையின் படைப்பில் இருப்போர் பெற்றோர் . பெற்றோர் என்ற வரையரைக்குள் நின்றால் போதுமா ? பெற்றோருக்கும் உற்றோருக்கும் வித்தியாசம் உண்டல்லவா ? களிமண் என்ற எந்த இயல்பும் அற்ற பொருளை வனைந்து வடிவெடுக்கும் குயவனைப் போல , கல்லினை செதுக்கும் சிப்பியைப் போல ஒன்றும் அறியா சின்னக்குழந்தையின் முதன் முகம் பார்த்து வெளிவர இருக்...