பலரின் எழுதப்படாத பதிவு
பலரின்எழுதப்படாதபதிவு......
தலைப்பினால். சற்றே குழம்பிப்போயிருப்பீர்கள். இதுகற்பனைக்கதையோ அல்லதுபுனைக்கதையோ அல்ல. எம்முள் பலபேரின் கதையாக இருக்கலாம். இனிதொடங்கும் உங்கள் வாழ்கைக்குவித்திட்டதாய் வரும்பதிவு.
Parenthood , பெரியபதவி, பொறுப்பு. எம்முள் சிலர் இதன் அர்த்தம் தெரியாமல் இருக்கின்றோம். ஒரு குழந்தையை இவ்உலகிற்கு கொண்டுவரும் இயற்கையின் படைப்பில் இருப்போர் பெற்றோர். பெற்றோர் என்ற வரையரைக்குள் நின்றால்போதுமா?
பெற்றோருக்கும் உற்றோருக்கும் வித்தியாசம் உண்டல்லவா?
களிமண் என்ற எந்தஇயல்பும் அற்ற பொருளை வனைந்துவடிவெடுக்கும் குயவனைப்போல, கல்லினை செதுக்கும் சிப்பியைப் போல ஒன்றும் அறியா சின்னக்குழந்தையின் முதன்முகம் பார்த்து வெளிவர இருக்கும் ஆரம்பகர்த்தாக்கள்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்றபாடல் அனைவரும் அறிந்ததே.. பெற்றோரின் பொறுப்புவெருமனே படிக்கவைத்து நல்லவனாய் வளர்க்க சிலகண்டிப்புக்கள் செய்து, நல்ல கௌரவமாய் திருமணம்நடத்திவைப்பதலுடன் வரைவிலக்கணம் முடிவதன்று.
இன்று பிள்ளை 5 வயதில் ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்
நல்லபெயர் உள்ள பிள்ளையாய் இருக்கவேண்டும், அதிக சம்பளம், கௌரவம் இருக்கவேண்டும் என்றுமட்டும் தான் நினைக்கின்றோம். அதில் உங்கள் பங்களிப்பு என்ன என்று பார்தீர்களா?
இதில் பங்களிப்பு என்பதுவெறும் பணம், சரீர உதவி மட்டுமல்ல. குழந்தையின் மனவளர்ச்சி இவற்றுள் தங்கியுள்ளது.
Parents are the guide-stones for their children.
நாம் கண்டோரில் எத்தனை பெற்றோர் குழந்தைகளின் வார்த்தைகள் மனதில்தோன்றும் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கின்றோம். சிலர் மதிப்பளிக்காவிட்டாலும் அவர்களிற்கு என நேரம் ஒதுக்குவோர் எத்தனை பேர்?
எல்லாக்குழந்தைகளுக்கும் பல இலக்கணங்கள் குழந்தைகளிடம் இருந்து வருகின்றது. அவசரமாக அவர்களுக்கு பணம் தேடும்நாம் அவர்கள் கூறும் வார்த்தைகளை செவிமடுக்க மறுக்கின்றோம்.
வழிவழியாய் தொடர்ந்துவரும் சம்பிரதாயங்களை போல் வழிவழியாய் உபயோகிக்கும் அவதூரான பேச்சு, பிள்ளைகள் திருந்திவிடும் என்றா உபயோகிக்கின்றீர்கள்? நிச்சயமாய் இல்லை. எளிதில் காயப்பட்ட மனம் எல்லாவற்றிற்கும் அடிமையாகிவிடும்.
நீங்கள் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள், வாக்குவாதங்களை சந்திக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதற்கு பகடுகாய்கள் அல்ல. அவர்கள் இலகுவில் எதனையும் உள்வாங்கிக்கொள்வார்கள்.
உங்கள் சுபாவம் எதுவாகிலும் இருக்கலாம். கோபமாய், வேலைப்பலுவால் விரக்தியாய் இருக்கலாம். குழந்தைகளுக்குஅவைதெரிவதில்லை.
Comparison இருக்க கூடாதஒன்று. அகற்றப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் நினைத்த கனவிற்கு வழிநடத்தாதீர்கள்.
அவர்களின் கனவு அறிந்து அவர்களை செம்மையாக வழிநடத்துங்கள்.
எந்தவிடயங்கள்ஙஆகினும் குழந்தைகளுக்கும் உங்களிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்து சிறிதுநேரம் ஒதுக்கி தெளிவாக நன்மைதீமைகளை சொல்லிக்கொடுங்கள். அப்பிள்ளைகள் தங்கள் பிழைகளை மட்டுமல்ல பிறரின் பிழைகளையும் திருத்தி சரிவரபாதையை நடத்திச்செல்லும்.
பிழையென அறிந்ததும் கடும்சொற்களை கண்டிப்புக்களை செய்யும் இடத்து அக்கண்டிப்புக்கள் தான்ஞாபகம் இருக்கும். இப்படி செய்தால் இந்ததண்டனை தருவார்கள் என்றுமட்டும் தெரிந்து வைத்திருக்கும். அதன் பிழையை திருத்தும் மனப்பக்குவம் வளர்ந்திருக்காது.
Be a good companion to your children. பிள்ளைகளின் Rolemodel ஆக இருக்கும் பெற்றோரும் உளர். Parenting is not about sincerity or about responsibility. அது ஒரு வித கலை.
இது புரிந்தவன் படைப்பாளி.
புரியாதவன் பயிற்சியாளன்.
பெற்றோர்கள் வரம். அவர்கள் அரவணைப்பில் இருப்பதும்வரம்.
அதனைப் போன்ற Parenting period இனை அனைவரும் காண்போம்.
உங்கள் பிள்ளைகளை அனைவருக்கும் நல்லவனாக இருக்க நினைக்காமல், அவர்களுக்கு அவர்களை நல்லவர்களாய் வாழவையுங்கள்.
உங்கள் சுபாவம் உங்களுடையது . அதில் குழந்தைகள் பாதித்துவிடக்கூடாது. உங்களை கையாண்டு அவர்களையும் கையாளுங்கள்.
Parenthood is a precious memory.
நீங்கள் படைப்பாளிகளா?
பயிற்சியாளர்களா?
Comments